கிச்சனில் கலக்க 7 சூப்பர் டிப்ஸ்: சமையல் இனி ஈஸி & டேஸ்டி...!
7 super tips excel kitchen Cooking now easy tasty
சமையலறை என்பது சமைக்கும் இடம் மட்டுமல்ல… சுவை உருவாகும் ஒரு சிறிய ஆய்வுகூடம். அங்கே செய்யும் சில சின்ன சின்ன டிப்ஸ்கள் கூட பெரிய மாற்றத்தை தரும். நேரம் மிச்சமாகவும், சுவை இரட்டிப்பாகவும், வேலை சுலபமாகவும் இருக்க இந்த சமையல் ரகசியங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும். தெரிந்த விஷயங்களாக இருந்தாலும், சரியான முறையில் பயன்படுத்தினால் உங்கள் சமையல் ‘சூப்பர் ஹிட்’ ஆகிவிடும்!

பக்கோடா extra மொறுமொறு ஆக:
கடலை மாவுடன் கொஞ்சம் அரிசி மாவை கலந்து பொரித்தால் பக்கோடா குருஞ்சு குருஞ்சென இருக்கும்.
முட்டை வறுக்கும் போது ஒட்டாத டிப்ஸ்:
வாணலியில் எண்ணெய் ஊற்றியவுடன் முதலில் ஒரு சிட்டிகை உப்பு தூவி பிறகு முட்டை உடையுங்கள். இது முட்டை அடியில் ஒட்டாமல் மென்மையாக வறுக்க உதவும்.
உருளைக்கிழங்கு வெடிக்காமல் வேகவைக்க:
வேகவைக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்தால், உருளைக்கிழங்கு அதிகமாக வெந்து சிதைவதைத் தடுக்கலாம்.
தக்காளி விரைவில் வதங்க:
தக்காளி சேர்க்கும் போது சற்றே உப்பு தூவினால், அது விரைவில் மெலிந்து வதங்கும்; நேரமும் மிச்சம், சுவையும் அதிகம்.
மசாலா கருகிவிட்டதா? கவலை வேண்டாம்:
ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கிளறினால் கருகிய சுவை குறைந்து மசாலா சமநிலைக்கு திரும்பிவிடும்.
முட்டை புது தானா பழையதா? எளிய சோதனை:
தண்ணீரில் போடுங்கள். அடியில் மூழ்கினால் புது முட்டை; மேலே மிதந்தால் பழையது.
குழம்பு கெட்டியாக வர ரகசியம்:
குழம்பு தண்ணீராக இருந்தால், ஒரு ஸ்பூன் வறுத்த கடலை மாவை சேர்த்தால் உடனே கெட்டியாகி ருசி கூடும்.
English Summary
7 super tips excel kitchen Cooking now easy tasty