கோவிலில் புகுந்து சாமி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர் - மஹாராஷ்டிராவில் பரபரப்பு.!!
youth urinated on sami statue in maharastra
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம் பவுட் கிராமத்தில் பழமையான நாகேஷ்வர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் உள்ள அன்னபூரணி அம்மன் சிலை மீது, ஒரு இளைஞர் திட்டமிட்டு சிறுநீர் கழித்து, அந்த சிலையை தரையில் வீசி சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அதன் படி போலீசார் விசாரணை நடத்தியதில், புனே நகரைச் சேர்ந்த சந்த் நௌஷாத் ஷேக் என்ற இளைஞர் கோவிலுக்குள் நுழைந்து, முழுமையான திட்டத்துடன் அம்மன் சிலையை கீழே வீசி உடைத்ததோடு, அதன்மீது சிறுநீர் கழித்து, பக்தர்களின் மத உணர்வுகளை கேள்விக்குள்ளாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சந்த் ஷேக் மட்டுமில்லாமல், அவரது தந்தை நௌஷாத் ஷேக் என்பவரும் சம்பவத்தில் தொடர்புடையவர் என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து இருவர் மீதும் பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து, பவுட் கிராமம் மற்றும் கோவில் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்புக்காக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஹவேலி துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் புஜாரி தெரிவித்துள்ளார்.
English Summary
youth urinated on sami statue in maharastra