ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருந்த வாலிபர் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருந்த வாலிபர் - நடந்தது என்ன?

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்ஜி தாக்கூர். இவர் கடந்த 2020 ஆம் கொலைக் குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் கொரோனா தொற்று பரவியதால் வழக்குகள் அனைத்தும் ஆன்லைனில் நடைபெற்று வந்தது.

இதனால், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையும் ஆன்லைனின் நடைபெற்றுள்ளது. இந்த விசாரணைக்குப் பிறகு இவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க உத்தரவிட்டு, அந்த உத்தரவுகளைச் சிறை நிர்வாகத்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளது. 

ஆனால், இந்த மின்னஞ்சலைச் சிறை அதிகாரிகள் திறந்து பார்க்காமல் இருந்துள்ளனர். இதனால் சந்தன்ஜி தாக்கூர் ஜாமீன் கிடைத்தும் மூன்று வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். இவர் மீண்டும் ஜாமீன் கேட்டு முறையிட்ட போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.சுபேஹியா மற்றும் எம்.ஆர்.மெங்டே உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு, "ஜாமீன் கிடைத்தும் மூன்று வருடங்கள் சிறையிலிருந்த குற்றவாளிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த இழப்பீட்டை 15 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth stayed three years prison after bail in gujarat


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->