தடை செய்யப்பட்ட அல்-கொய்தாவுடன் தொடர்பு; புனே வாலிபர், சென்னை நண்பர் கைது..!
Youth arrested in Pune for links to banned Al Qaeda
கடந்த அக்டோபர் 09-ஆம் தேதி பல்வேறு இடங்களில் மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். சோதனையின் ஒரு பகுதியாக புனேவில் உள்ள கோந்த்வா பகுதியைச் சேர்ந்த 35 வயதான, மென்பொருள் பொறியாளர் ஜூபைர் ஹங்கர்கேகர் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஜூபைரின் லேப் டாப் உள்பட மொத்தம் 19 லேப் டாப்கள், 40 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அப்போது ஜூபைரின் லேப் டப்பை படையினர் ஆய்வு செய்துள்ளனர்.
அதில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா தொடர்பான ஆவணங்களை பதிவிறக்கம் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜூபைர் ஹங்கர்கேகரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரை நவம்பர் 04-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதேவேளை சென்னையில் இருந்து புனே ரயில் நிலையம் வந்திறங்கிய ஜூபைரின் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Youth arrested in Pune for links to banned Al Qaeda