போலீஸ் வாகனத்துடன் இன்ஸ்டா ரீல் - கையும் களவுமாக சிக்கிய வாலிபர்.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில், இந்திராபுரம் பகுதியில் உள்ள கணவாணி பாலம் அருகே போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் காவல்துறை அதிகாரிகள் கடந்த பதினைந்தாம் தேதி ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களின் வாகனம் காலியாக இருந்ததை கவனித்த மொயின் கான் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் ரீல் எடுப்பதற்காக வாகனத்தை பயன்படுத்தியுள்ளார். 

சிவப்பு நிறத்தில் கோட் சூட் அணிந்து, கையில் குளிர்பானத்துடன் அவர் காவல்துறையின் மஹிந்திரா பொலிரோவின் பக்கவாட்டுப் படிக்கட்டில் இருந்து இறங்கும் வகையில் அந்த ரீல் படமாக்கப்பட்டிருந்தது. பின்னணியில் இசையுடன் இளைஞர் நடந்து வந்த அந்த ரீல் வலைத்தளத்தில் வைரலானது.

இந்த நிலையில், தற்போது அந்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் ரீல் மோகத்தில், பலரும் இவ்வாறு சேட்டைகள் செய்வது வழக்கமாகி போன நிலையில், இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும் என்று கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for instagram reel with police vehicle in uttar pradesh


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->