ஆளுநருக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் ஆரிப் முகமது கான். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "பத்து நாட்களுக்குள் கவர்னர் கொல்லப்படுவார்" என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த மிரட்டல் தொடர்பாக கவர்னர் அலுவலக அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்துவதற்கு திருவனந்தபுரம் காவல் ஆணையர் நாகராஜூ உத்தரவிட்டார். 

அந்த உத்தரவின் படி, சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், கவர்னருக்கு வந்த மின்னஞ்சல் கோழிக்கோடு பகுதியில் இருந்து வந்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் சம்பவம் குறித்து கோழிக்கோடு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து, அவர்கள் கோழிக்கோடு பகுதியில் விசாரணை மேற்கொண்டு மின்னஞ்சல் அனுப்பிய நபரை கண்டுபிடித்தனர். அதன் பின்னர் அவரிடம்  விசாரணை நடத்தியதில், அவரது பெயர் சம்சுதீன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்சுதீனை கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man kill threat to kerala governor arif khan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->