ராகுல் காந்தியின் தலைமை முற்றிலும் தோல்விதான் - எடியூரப்பா தாக்கு! - Seithipunal
Seithipunal



கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வருகின்ற 26 ஆம் தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. 

முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல் மந்திரி பி.எஸ். எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர், மக்களவைத் தேர்தலை காங்கிரஸ் மறந்துவிட்டது. ராகுல் காந்தியின் தலைமை முற்றிலும் தோல்வி மட்டும் தான். 

மாநில காங்கிரஸ் அரசு, மத்திய அரசின் மானியங்கள் குறித்து மட்டுமே பேசுகிறது. மோடியின் சாதனைகளை அடிப்படையாக வைத்து இந்த தேர்தல் நடைபெற உள்ளது. 

நரேந்திர மோடி எப்படி 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கினார் என்று எந்த புள்ளி விவரமும் தெரியாமல் காங்கிரஸ் பேசுகிறது. 

நாட்டில் ஏழு கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களில் சித்தராமையா அரசு, எத்தனை வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் அரசு ஒரு வேலை வாய்ப்பை கூட உருவாக்கவில்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yediyurappa says Rahul Gandhi leadership failure


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->