பிரதமருக்கு பார்சல் அனுப்பிய பெண் விவசாயி! - Seithipunal
Seithipunal


நாட்டின் 76வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். 

நாடு முழுவதும் சுமார் 1800 பேர் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் செங்கோட்டை சுதந்திர தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் உத்தரகாசி அருகே உள்ள ஜாலா கிராமத்தை சேர்த்தவர் சுனிதா ரவுதாலா. இவர் ஒரு விவசாயி. இவருக்கும் மத்திய அரசு செங்கோட்டை சுதந்திர தின விழாவில் பங்கேற்க அழைப்பித்தல் விடுத்துள்ளது. 

இவரது கிராமத்தில், இவர் ஆப்பிள் சாகுபடி செய்து வருகிறார். மேலும் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 162 பேரை ஒருங்கிணைந்து விவசாய கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி, சங்கத்தின் மூலம் ஆப்பிள் ஜாம் விற்பனை செய்து வருகிறார்.

சுனிதா ரவுதாலா, கடந்த மார்ச் மாதம் தான் தயாரித்த ஆப்பிள் ஜாமை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பினார். இந்த நிலையில் சுதந்திர தின விழாவில், அவரை ஊக்குவிக்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women farmer sent  parcel to the Prime Minister


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->