பெண்களின் பாதுகாப்பிற்காக கல்யாணத்திற்கு முந்தைய படப்பிடிப்புகளைத் தவிர்க்க வேண்டும் - மகளிர் ஆணைய தலைவி பேச்சு.! - Seithipunal
Seithipunal


கல்யாணத்திற்கு முந்தைய படப்பிடிப்புகளைத் தவிர்க்க வேண்டும் - மகளிர் ஆணைய தலைவி பேச்சு.!

சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் கிரண்மயி நாயக் தலைமையில், 172வது பொது கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது 25 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் நின்றுபோன ஒரு வழக்கு இருந்தது.

இந்த வழக்கு குறித்த விசாரணையின் போது, மனுதாரர் தனது வழக்கை வாபஸ் பெறுமாறு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தில், இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்டியதாகவும், எதிர் தரப்பினர் திருமணத்திற்காக செலவழித்த பணத்தை திருப்பி அளித்ததாகவும், திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கியதாகவும் விளக்கினார்.

மேலும், விண்ணப்பதாரர் எதிர்காலத்தில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் ஏதேனும் தனது அனுமதியின்றி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டாலோ அல்லது பகிரப்பட்டாலோ, எதிர் தரப்பினருக்கு எதிராக புகார் அளிக்க முடியும் என்று எதிர் தரப்புக்கு விளக்கப்பட்டது" என்று விண்ணப்பதாரர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கிரண்மயி நாயக் பேசியதாவது:- “தற்போதைய காலத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது நமது இந்திய கலாச்சாரத்தில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

அதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இந்த படப்பிடிப்பு அவர்களின் மகள்களுக்கு தீங்கு விளைவிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

womans avoid photoshoot before marriage


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->