நாடாளுமன்ற அமளியை படம் பிடித்த பெண் எம்.பி ரஜனி அசோக் ராவ் பாடீல் இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஒன்றாம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து மறுநாள் நடப்பாண்டுக்கான மத்திய அரசு சார்பில் முழு பட்ஜெட்டாய் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து வழக்கம் போல், நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி குழுமம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் விவாதம் நடைபெற்றது.

இதனால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதால், ஒத்திவைக்கப்பட்ட பின்னர் கூட்டப்பட்டது. இந்தநிலையில், பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாடாளுமன்ற மாநிலங்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்திற்கு பதில் அளித்தார்.

அப்போது, நாடாளுமன்ற சபையில் மீண்டும் அமளி ஏற்பட்டது. அதனை சபையில் இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.பி ரஜனி அசோக் ராவ் பாடீல் படம் பிடித்துள்ளார். 

இதையடுத்து, சபையில் அமளியை படம் பிடித்தது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு கட்சித்தலைவர்களின் கருத்தைக் கூறுமாறு, நேற்று மாநிலங்களவையில் சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கேட்டுக்கொண்டார். 

அதைத் தொடர்ந்து, ரஜனி அசோக்ராவ் பாடீலை மீதமுள்ள கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அவரை மீதமுள்ள கூட்டம் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman mp rajani ashok raw patil dismisses from rajyashaba current session


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->