அதிர்ச்சி - இளம்பெண் நீதிபதி தற்கொலை - போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள படாவன் நகரில் நீதிபதிகளுக்கான காலனியின்  வசித்து வந்தவர் ஜோத்சனா ராய். படாவன் நீதிமன்றத்தில் இளநிலை நீதிபதியாக பணியாற்றி வந்த இவர், இன்று காலை பணிக்கு வரவில்லை. இதனால், அவருடைய சக நீதிபதிகள் தொலைபேசி மூலம் அவரை அழைத்துள்ளனர்.

ஆனால் எந்த பதிலும் இல்லாததால், அவர்கள் பெண் நீதிபதியின் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவருடைய வீட்டின் படுக்கையறை உள்புறம் பூட்டப்பட்டிருந்தது. இதனால், சந்தேகமடைந்த அவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் படி போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, பெண் நீதிபதி மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார். மேலும், அந்த அறையில் இருந்து சில ஆவணங்களும் மற்றும் தற்கொலை குறிப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மூத்த போலீஸ் சூப்பிரெண்டு அலோக் பிரியதர்ஷினி கூறும்போது, மன உளைச்சலால் அவர் பாதிக்கப்பட்டு இருக்க கூடும் என்று முதல் கட்ட விசாரணையின்படி தெரிகிறது. அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman lawyer sucide in uttar pradesh


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->