இரண்டாவது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை சித்தரவதை செய்த காதலி கைது.! - Seithipunal
Seithipunal


இரண்டாவது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை சித்தரவதை செய்த காதலி கைது.!

கேரள மாநிலத்தில் உள்ள வர்க்கலை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி பிரியா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் லட்சுமி பிரியாவுக்கு மற்றொரு மாணவருடன் தொடர்பு ஏற்பட்டு அவரை லட்சுமிபிரியா காதலிக்க ஆரம்பித்தார். 

இதைக்கேட்டு மனம் உடைந்த முதல் காதலன், லட்சுமி பிரியாவை சந்தித்து தன்னுடனான காதலை கைவிடக்கூடாது என்று தெரிவித்தார். இருப்பினும் லட்சுமி பிரியா இரண்டாவது காதலன் மீதான மோகத்தில் முதல் காதலனை மறந்து, அவரை தன்னுடன் பேச வேண்டாம் என்றும் மீறி பேசினால் கொலை செய்வதாகவும்   எச்சரித்தார். ஆனால், முதல் காதலன் லட்சுமி பிரியாவை தொடர்ந்து சந்திக்க முயற்சி செய்து வந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த லட்சுமி பிரியா நேற்று முன்தினம் முதல் காதலனை நேரில் சந்திக்க வருமாறு அழைத்தார். அங்கு லட்சுமி பிரியாவுடன் இரண்டாவது காதலனும் அவரது கூட்டாளிகளுடன் இருந்தார்.

அனைவரும் சேர்ந்து முதல் காதலனை சரமாரியாக தாக்கி ஒரு காரில் ஏற்றி கடத்தி அவரை சித்ரவதை செய்தனர். பின்னர் அவரது செல்போனை பறித்து கொண்டு கையில் இருந்த ரொக்கப்பணத்தையும் எடுத்து கொண்டு தப்பித்துச் சென்று விட்டனர். 

இந்த நிலையில், தன் மகனை காணவில்லை என்று முதல் காதலனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிய போது, அவர் வாலிபர் உடல் முழுவதும் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்துள்ளார்.

அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீசார் சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரை முன்னாள் காதலி, தனது இரண்டாவது காதலனுடன் சேர்ந்து கடத்தி சென்று சித்ரவதை செய்தது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து போலீசார் லட்சுமி பிரியாவை அதிரடியாக கைது செய்தனர். ஆனால், லட்சுமி பிரியாவின் இரண்டாவது காதலன் மற்றும் கூட்டாளிகள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman arrested for torture first boy friend in kerala


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->