தொடரை கைப்பற்றுமா இந்தியா?... இங்கிலாந்துடன் இன்று மோதல்!
Will India win the series? Match against England today
இந்தியா - இங்கிலாந்து இடையே3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற முனைப்பில் இந்திய அணி களமிறங்க உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய ஆணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.மிகுந்த எதிர்பார்ப்பில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற முனைப்பில் இந்திய அணி களமிறங்க உள்ளது. அதே சமயம் தொடரை இழக்க கூடாது என்பதில் இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாக இருப்பர் என்பதில் ஐயமில்லை. இதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Will India win the series? Match against England today