குரங்கு அம்மை அதிவேகமாக பரவும் அபாயம்.! இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


உலக நாடுகளை குரங்கு அம்மை தொற்று கடுமையாக மிரட்டி வருகிறது. ஆப்பிரிக்கா நாடுகளின் பரவிய இந்த குரங்கு அம்மை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் வேகமாக பரவியது. தற்போது தெற்காசிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்காமை பாதிப்பால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்தியாவில் கேரளாவில் தான் முதல் முறையாக குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டது. வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பி நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு டெல்லியில் ஒருவருக்கு குரங்கமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தெலுங்கானாவில் குரங்கம்மை பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குரங்கு அம்மை தொற்று பரவு வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு குரங்கு அம்மை தொற்று அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHO says Monkey Pox in India


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->