பாஜக தொண்டர்களின் உணர்ச்சி, பல்பு வாங்கிய சோகம்.. காமெடி வீடியோ.!! - Seithipunal
Seithipunal


இந்திய சீன எல்லையில் உள்ள லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இந்திய - சீன இராணுவத்தினர் மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 43 பேர் இறந்திருக்கலாம் என்றும், பலர் காயமாகியிருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தாத தகவல் வெளியாகியுள்ளது.

இராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக இந்திய - சீன எல்லையில் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் போரை எதிர்கொள்ள இருநாடுகளும் தங்களின் படைகளை எல்லையில் குவித்த வண்ணம் உள்ளது. இருப்பினும், பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீனாவிற்கு எதிராக இந்தியாவில் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், சீன பொருட்களை புறக்கணிக்க இந்தியாவில் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது. மேலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சீன பொருட்களை வீதியில் போட்டு உடைத்தும், சீன அதிபரின் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தியும் வருகின்றனர். 

இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தை சார்ந்த பாஜக கட்சியினர், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் புகைப்படத்திற்கு பதிலாக வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவை சார்ந்த ஒருவர் பேசுகையில், " சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற காரணத்தால், சீன அதிபரான கிம் ஜான் உன்னின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த விஷயம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Bengal BJP Members burned North Korea President photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->