ரேஷன் கடைகளில் தண்ணீர் பாட்டில் விற்பனை - மாநில அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


நமது அண்டை மாநிலமான கேரளாவில் சுமார் இரண்டு ஆயிரம் ரேசன் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் மக்களுக்கு வங்கி மற்றும் பிற ஆன்லைன் சேவைகல் மற்றும் பல்வேறு பொருட்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ரேசன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. nஅதன்படி ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கு வழங்கப்படும். 

அதாவது, மாநில நீர்ப்பாசன துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான கேரள நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தயாரிக்கும் "ஹில்லி அக்வா" என்ற பெயரில் தரமான தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளது.

இந்த தண்ணீர் பாட்டில் வெளிச்சந்தையில் ரூ15 வரை விற்பனை செய்யப்படுகிறது. சபரிமலை சீசனை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக கோட்டயம், இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளுக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக மற்ற மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளிலும் தண்ணீர்பாட்டில் விற்பனையை தொடங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

water bottle sales in kerala ration shops


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->