இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்கிரம் சாராபாய் நினைவு தினம்.!! - Seithipunal
Seithipunal


விக்கிரம் சாராபாய் :

இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்கிரம் ஆம்பாலால் சாராபாய் 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்தார்.

சிறுவயதிலிருந்தே கணிதத்திலும், இயற்பியலிலும் அதிக நாட்டம் கொண்டவராக இருந்தார். இங்கிலாந்தில் பிஹெச்.டி. ஆராய்ச்சியை முடித்த பிறகு 1947ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவினார்.

இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண் ஏவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் இவரே. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் (மறைவுக்குப் பிறகு) ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆராய்ச்சி, ஆராய்ச்சி கல்வியின் மேம்பாட்டிற்காக கடுமையாக பாடுபட்ட விக்கிரம் சாராபாய் 1971ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vikram sarabhai memorial day 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->