விழுப்புரத்தில் நான் தான் போட்டியிட போறேன் - விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உறுதி.! - Seithipunal
Seithipunal


நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், விழுப்புரம் கோட்டகுப்பம் நகராட்சி திடலில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபற்றது. இதில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உட்பட விசிகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களவைப் பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இரண்டு தனி தொகுதி மற்றும் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்ப்பில் ஆரம்பத்தில் இருந்தே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கடந்த ஆண்டை போலவே விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவளவன் 'பானை' சின்னத்திலும், விழுப்புரத்தில் தொகுதியில் ரவிக்குமார் 'உதயசூரியன்' சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர்.

அதன் படி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விழுப்புரத்தில் போட்டியிடப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், விழுப்புரம் தொகுதியில் மீண்டும் தானே போட்டியிட உள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck public secretary ravikumar participate vilupuram constituency in parliment election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->