வந்தே பாரத்தில் கிளம்பிய புகை.. அலறியடித்து ஓடிய பயணிகள்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான ரயில் சேவையை வழங்கும் வகையில் மத்திய அரசு வந்தே பாரத் ரயிலை இயக்கி வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்குள் ஏற்பட்ட திடீர் புகை மூட்டத்தால் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து செகந்திராபாத் சென்ற வந்தே பாரத் ரயிலுக்குள் திடீரென புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் மனுபோலு ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்ட நிலையில் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்து வெளியேறினர்.

இதனை அடுத்து ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் கழிவறை ஒன்றில் இருந்த பாதி எரிந்த சிகரெட்டில் இருந்த தீப்பிழம்பின் மூலம் புகைமூட்டம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை அடுத்து ரயில் பெட்டியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில் இந்த சம்பவத்திற்கு காரணமான டிக்கெட் இல்லாத ரயில் பயணி ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் வந்தே பாரத் ரயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vande Bharat train caused commotion due to smoke billowing


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->