வைஷ்ணோ தேவி கோயில் யாத்திரை செப்டம்பர் 14 முதல் மீண்டும் தொடக்கம்..!
Vaishno Devi Temple pilgrimage to resume from September 14th
நிலச்சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட வைஷ்ணோதேவி கோவிலுக்கு செல்லும் யாத்திரை, செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணோதேவி குகைக் கோவில் மிகவும் புகழ்பெற்றது. கடந்த மாதம் 26-ஆம் தேதி அங்கு பெய்த கனமழை காரணமாக வைஷ்ணோதேவி கோவிலுக்குச் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு 34 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து கோவிலுக்குச் செல்லும் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வைஷ்ணோதேவி கோவில் யாத்திரை, செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் உரிய அடையாள அட்டையை பயணத்தின் போது கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், எந்த பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளதோ, அந்த பாதையை மட்டுமே யாத்ரீகர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், கோயில் ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary
Vaishno Devi Temple pilgrimage to resume from September 14th