மக்கள் தொகையே நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடை - உ.பி முதல்வர் யோகி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும் கருதப்படுவது உத்திரபிரதேசம் தான். உத்திரபிரதேசம் மாநிலத்தில் மக்கள் தொகையும் சரி, அம்மாநிலத்தின் பரப்பளவு மற்றும் மாவட்டங்களின் எண்ணிக்கை போன்றவற்றிலும் சரி, அது இந்தியாவிலேயே மிகப்பெரியதாக உள்ளது. 

அங்குள்ள மக்கள் குடும்பத்திற்கு கணக்கற்ற குழந்தைகள் பெற்றுக்கொள்வதால் அம்மாநில அரசு பல பிரச்சனைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்கொண்டு வந்தது. இதனை கட்டுக்குள் கொண்டு வர அம்மாநில அரசு 2 குழந்தைகளுக்கு மேல் பெட்ரோகொள்பவர்களுக்கு அரசு சலுகைகள், அரசு வேலைகள் போன்றவை கிடைக்காது என அதிரடியாக அறிவித்தது. 

இந்நிலையில், உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு 2021 - 2030 ஆம் வருடத்திற்கான மாநில மக்கள் தொகை கொள்கை திட்டத்தினை உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்து அறிமுகப்படுத்தினார். 

இதனைத்தொடர்ந்து, அவர் பேசுகையில், " மக்கள் தொகை பெருக்கம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. இதனை அனைத்து சமூக மக்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். இதனை முன்னிறுத்தி மக்கள்தொகை கொள்கை திட்டம் 2021 - 2030 திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh CM Yogi Adityanath Speech about Population is Affect Courtiers Growth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->