பா.ஜ.க எம்.எல்.ஏ நடத்தி வைத்த திருமணங்களில் மெகா மோசடி: விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி தகவல்!  - Seithipunal
Seithipunal


பாஜக எம்எல்ஏ நடத்தி வைத்த திருமணங்களில் மெகா மோசடி நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. புகாரின் பேரில் உத்தரபிரதேச போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உத்திர பிரதேசம் பாஜக எம்எல்ஏ தலைமையில் 568 ஜோடிகளுக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமணத்தில் மெகா மோசடி நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், திருமண விழாவில் மூலம் சுமார் ரூ. 2 கோடி அளவுக்கு பண மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

உத்திர பிரதேசத்தில் திருமண திட்டத்தின் கீழ் ஏழை மணமகள்களுக்கு தலா ரூ. 35 ஆயிரம் பணம், 65 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும். இந்நிலையில் அதனை அபகரிப்பதற்காக சுமார் 200 ஜோடிகளுக்கு போலி திருமணம் நடத்தி வைத்து மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. 

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 568 ஜோடிகளில் 200 போலி ஜோடிகளுக்கு திருமணம் செய்யப்பட்டுள்ளது தெரிவித்துள்ளது. மணமகனாக நடித்தவர்களுக்கு ரூ. 500 முதல் 2000 வரை பணம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh BJP MLA conducted marriages fraud 


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->