50 வயதில் ஆசை! ஹனி ட்ராப்பில் சிக்கிய நபர்! மூன்று பேர் கைது! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசத்தில் 50 வயதான முதியவரை 'பிளைண்ட் டேட்டிங்' மூலம் மர்ம கும்பல் கடத்தி, 3 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லலித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த லல்லு என்ற 50 வயதான முதியவருக்கு, ஒரு பெண்ணிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தது. 

அந்த பெண்ணை சந்திக்க ஜான்சி நகருக்கு சென்ற போது, அங்கு மர்ம கும்பல் அவரை கடத்தி, அவரது குடும்பத்தாரிடம் 3 லட்சம் கேட்டு மிரட்டியது. 

முதல் தவணையாக 1 லட்சம் ரூபாய் கொடுத்து, அவரது குடும்பத்தினர் மீதமுள்ள தொகையைத் தரவிரைந்து சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் ரகசிய ஆபரேசன் நடத்தியதில், லல்லுவை வெற்றிகரமாக மீட்டனர். இதில் 3 பேர், அதில் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர். 

போலீசாரின் விசாரணையில், பெண்களை பயன்படுத்தி ஹனிட்ராப் அமைப்பின் கீழ் ஏற்கனவே பலரையும் இந்த கும்பல் ஏமாற்றி கடத்தியது தெரியவந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UP Honey trop kidnaped case


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->