ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு "ரூ. 2.79 கோடி"..! இதைத்தான் ஆளுநர் சொன்னாரே..! தீவிரம் அடையும் விசாரணை..!! - Seithipunal
Seithipunal


தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்க வெளிநாட்டு நிதி முறைகேடாக பயன்படுத்தியதாக புகார்..!!

கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் மாசடைவதாகவும் பொது மக்களுக்கு புற்றுநோய் ஏற்படதாகவும் கூறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தின் 100வது நாளில் போராட்டக் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் கலவரமாக மாறிய சூழலால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டதில் காவல்துறையே முழு காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவி நேற்று இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இடையே நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40% காப்பர் பயன்பாட்டை நிறைவு செய்ததாகவும் வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகள் நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது எனவும் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சூழ்நிலையில் "தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு நிதி வழங்கியது தொடர்பாக தி அதர் மீடியா என்ற தன்னார்வலர் தொண்டு நிறுவனம் மீது புகார்கள் வந்தனவா..?" என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் நரம்பாய் ரத்வா மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். 

இதற்கு நேற்று முன்தினம் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பதிலில் தன்னால் வர தொண்டு நிறுவனமான தி அதர் மீடியா ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தை ஒருங்கிணைக்க வெளிநாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் வந்துள்ளது.

அந்த புகார் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு கால கட்டத்தில் அந்த நிறுவனத்திற்கு ரூ. 3.54 கோடி வெளிநாட்டு நிதி வந்துள்ளது. அதில் ரூ. 2.79 கோடியை அந்நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பயன்படுத்தி உள்ளது. அந்த நிறுவனத்தின் நிதி பயன்பாடு குறித்து விரிவான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும்" என மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். நேற்று தமிழக ஆளுநர் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் நேற்று முன்தினமே நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு நிதி பயன்படுத்தியது தொடர்பாக மத்திய அமைச்சரால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Minister said foreign funds were used in Sterlite protest


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->