மைசூருக்கு விரையும் மத்திய அமைச்சர் அமித்ஷா - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கர்நாடகா மாநிலம் மைசூருக்கு வருகிறார். அங்கு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். 

இதையடுத்து நாளை காலை 11 மணியளவில் அமைச்சர் அமித்ஷா சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு கார் மூலம் செல்கிறார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்துகிறார். 

இதைத் தொடர்ந்து, மதியம் 2 மணியளவில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மைசூருவில் பாஜக தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். பின்னர் சுத்தூரில் நடைபெற்று வரும் திருவிழாவில் கலந்து கொள்கிறார். 

இவை அனைத்தையும் முடித்துக்கொண்டு இரவு மைசூருவில் இருந்து டெல்லிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார். மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையால் மைசூரில் மண்டகள்ளி விமான நிலையம், நட்சத்திர ஓட்டல், சாமுண்டி மலை, மற்றும் முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister amithsha travel to mysore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->