ஏர் இந்தியா விமான விபத்து: 'விசாரணையில் உண்மையின் பக்கம் நிற்க விரும்புகிறோம்': மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் விளக்கம்..! - Seithipunal
Seithipunal


அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணையில், உண்மையின் பக்கம் தான் நாங்கள் இருக்க விரும்புகிறோம் என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

இது குறித்து ராஜ்ய சபாவில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு  பேசியதாவது: கடந்த மாதம் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் உள்ள விவரங்களை சேகரிப்பதில் விமான விபத்து புலனாய்வு பணியகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சர்வதேச விமான போக்குவரத்து நெறிமுறைகளுக்கு உட்பட்டு விசாரணை நடக்கிறதாகவும்,  இதில் எவ்வித பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடைபெற்று வருகிறதாக தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த விபத்து தொடர்பில் உண்மையின் பக்கம் தாங்கள் நிற்க விரும்புகிறதாகவும், வேறு எதற்கும் அல்ல. விபத்தில் சரியாக என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க விரும்புகிறதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் இறுதி விசாரணை அறிக்கைக்கு பின்னரே அதன் விவரங்கள் வெளிவரும் என்று அமைச்சர் ராம்மோகன் நாயுடு மேலும் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Civil Aviation Minister explains that he wants to stand on the side of truth without any bias in the Air India plane crash investigation


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->