கொரோனா தடூப்பூசி முக்கியத்துவம்.. இந்தியாவுக்கு யுனிசெப் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தியதிலும், கொரோனா பாதிப்பால் ஏற்படுகின்ற உயிரிழப்புகளை தடுப்பதிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு உண்டு.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகளின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்பட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி நம்பிக்கை திட்டத்தின் கீழ் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் கொரோனா தொற்றுக்கு பிறகு 55 நாடுகளில் தடுப்பூசிகளின் முக்கியத்துவம் பற்றிய கருத்து உறுதியாக இருப்பதாக தெரியவந்தது. ஆனால் அதில் 52 நாடுகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் முக்கியத்துவம் குறித்த பொதுவான பார்வை குறைந்துவிட்டது.

ஆனால் தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தில் உறுதியாக இருந்து செயல்பட்ட 3 மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று ஐநா அமைப்பான யூனிசெப் பாராட்டி உள்ளது. அந்த மூன்று நாடுகளில் சீனா மற்றும் மெக்சிகோவும் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UNICEF praises to India


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->