உக்ரைன் இந்திய மருத்துவ மாணவர்களுக்கு உதவ இணையதளம் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ! - Seithipunal
Seithipunal


ரஷ்ய போரால் மருத்துவ படிப்பை பாதையில் விட்டு உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு நம் நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை அளிக்க சட்டத்தில் இடமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துவிட்டது.  இதனால் ஆயிரக்கணக்கான எம்பிபிஎஸ் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.


 
பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொடுத்த வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரம், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று வரும் மாணவர்கள் இந்திய மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை.

இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, "உக்ரைனில் மருத்துவ கல்வி பயின்று, பாதியில் இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உதவும் வகையில், ஒரு இணையதளத்தை உருவாக்கி, அதில்,  வெளிநாட்டு மருத்துவ பல்கலைக்கழகங்கள் குறித்து விவரங்களை அளிக்கவேண்டும் என்று, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், "வெளிப்படையான அமைப்பை உருவாக்கி, பிற நாடுகளில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்களில் இருக்கும் மாணவர் சேர்க்கை இடங்கள் மற்றும் கல்வி கட்டணம் உட்பட அனைத்து விவரங்களையும் அந்த இணையதளத்தில் இட பெற  செய்ய வேண்டும்" என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் பதிலை கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க கால அவகாசம் கோரினார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine Indian Medical Student Education case SC Order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->