விவசாயம் எங்கள் உயிர்...! பிரதமரிடம் சரமாரி கேள்விகளை முன்வைத்த முதலமைச்சர்... - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாக இருந்து வருவது, புல்லட் இரயில் திட்டமான மும்பை - அகமதாபாத். இந்த திட்டத்திற்கு ஜப்பான் நாட்டின் உதவியுடன் சுமார் 508.17 கிமீ தொலைவுக்கு செயல்படுத்தப்படவுள்ளது. 

இந்த திட்டத்தை செயல்படுத்த நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினமான 2022 ஆம் வருடம் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலைச்சர் உத்தவ் தாக்கரே, மும்பை - அகமதாபாத் திட்டத்தை மறுஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் அளித்துள்ள பேட்டியில், உத்தவ் தாக்கரே புல்லட் இரயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், நரேந்திர மோடியின் புல்லட் இரயில் திட்டம் கனவு திட்டமாக இருக்கலாம். நாங்கள் விழிக்கும் நேரத்தில் கனவு அனைத்தும் கலைந்துவிடும். எதார்த்தத்தை பிரதமர் எதிர்கொள்ள நேரிடும். 

புல்லட் இரயில் திட்டத்தால் பயன் அடைபவர்கள் யார்? மகாராஷ்டிரா மாநிலத்துடைய வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு இது எப்படி உத்வேகத்தை அளிக்கும்?.. விவசாய நிலத்தினை கையகப்படுத்துதல் சரியானது அல்ல.. என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uddhav thackeray ask modi about bullet train process


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->