இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


இந்தோனேஷிய அருகில் கிழக்கு திமோர் கடற்பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் காரணமாக இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு திமோர் கடற்பகுதியில் 50 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று காலை 9 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.1 எனப் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இந்தியா மற்றும் இலங்கை கடற் பகுதிகளில் சுனாமி ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு சுமத்ராவின் கடலோரப்  பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 9.1 என ரிக்டர் அளவுகோளில் பதிவானது. இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமியின் கோர தாக்கத்தால் 2.20 லட்சம் பேர் பலியாகினர். இதில்,  1.70 லட்சம் பேர் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tsunami warning to indian Pacific Ocean


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->