புடினுக்கு 12 நாள் காலக்கெடுத்துள்ள விதித்துள்ள டிரம்ப்: மீறினால் பொருளாதாரத் தடையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை..!
Trump warns Putin he will face economic sanctions if he violates 12 day deadline
உக்ரைன் போர் அமைதி ஒப்பந்தத்தில், கையெழுத்திட புடினுக்கு இன்னும் 10 முதல் 12 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. அவ்வாறு அவர் கையெழுத்திடாவிட்டால் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால், உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் போரை 50 நாட்களில் முடிவுக்கு கொண்டு வராவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
-qhsby.png)
இந்நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று கூறி இருப்பதாவது: உக்ரைன் போர் அமைதி ஒப்பந்தத்தில், கையெழுத்திட புடினுக்கு இன்னும் 10 முதல் 12 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இல்லையெனில் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவின் அதிபர் புடின் மீதான தனது விரக்தியை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்திருந்தும் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும், புடினால் நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன் என்றும், அவருக்கு வழங்கிய 50 நாட்கள் கெடுவை நான் குறைக்கப் போகிறேன். ஏனென்றால் என்ன நடக்கப் போகிறது என்பதற்கான பதில் எனக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Trump warns Putin he will face economic sanctions if he violates 12 day deadline