பணியில் இருந்த நிலையில் திரிபுரா டிஜிபி அனுராக் தன்கர் மர்ம சாவு; நிலுவை வழக்குகளால் அழுத்தமா..? விசாரணையில் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


திரிபுரா மாநில டிஜிபி அனுராக் தன்கர் பணியின்போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி அனுராக் தன்கர், குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். 1994 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், எஸ்.பி., ஐ.ஜி. என படிப்படியாக உயர்ந்து காவல் துறையில் ஒரு மாநிலத்தின் உச்ச பொறுப்புக்கு வந்தவர். கடந்த 2025 மே மாதம் முதல் திரிபுரா மாநிலத்தின் டிஜிபி ஆக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல் அகர்தலாவில் உள்ள காவல் துறை தலைமையகத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு. அவர் தனது அறையில் அலுவல் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், நண்பகல் 12 மணியளவில் அலுவலக அறையில் உள்ள கழிவறையில் மயக்க நிலையில் அசைவற்று கிடந்துள்ளார்.

அதைக் பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள கோவிந்த் வல்லப் பந்த் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது நாடித்துடிப்பு இல்லாமல் இருந்துள்ளது. ஆனாலும், சிபிஆர் கொடுத்து அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர்.

அதுவும் பலனளிக்காத நிலையில், 12:48 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னர் தான் ஆவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையின் படி, டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மாநிலத்தின் பல்வேறு வழக்குகளை அனுராக் தன்கர் விசாரித்த நிலையில், அவர்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர் யாரேனும் நெருக்கடி கொடுத்தனரா? அல்லது வேறு எதாவது காரணத்திற்காக அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்ற கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனுராக் தன்கர் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பணியில் இருந்த டிஜிபி மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tripura DGP Anurag Dhankhar mysteriously dies on duty


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->