தமிழகத்தை விரட்டிய கேரளம்.! உருவான புதிய குழப்பம்.!  - Seithipunal
Seithipunal


ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யும் படிவத்தில் தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் மலையாளம் இருந்ததால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ரயில்வேயில் முன்பதிவு படிவங்களில் ஒருபுறம் ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் மறுபக்கம் பிராந்திய மொழிகளிலும் படிவங்களானது இடம்பெற்றிருக்கும். தமிழக ரயில்வே நிலையங்களில் வழங்கப்படும் படிவங்களில் தமிழ் மொழியில் தான் படிவ விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்பவர்கள் பெரும்பாலும் தமிழில் தான் பூர்த்தி செய்து இருப்பர். இந்நிலையில் திருச்சி இரயில் நிலையத்தில் அளிக்கப்படும் முன்பதிவு படிவத்தில் தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் மலையாளம் இருந்துள்ளது. இதனால் தமிழ் மட்டுமே தெரிந்த பலரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியாமல் குழப்பத்தில் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்து வருகின்றனர். முன்பதிவு விண்ணப்பங்கள் சென்னையில் இருந்துதான் கொண்டு வரப்படுகின்றது. எனவே படிவத்தை தவறுதலாக மாற்றி அனுப்பி இருக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy passengers confused on railway


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->