முன் கூட்டி திறக்கப்படும் சபரிமலை கோவில் நடை - காரணம் என்ன?
today sabarimalai temple gate open
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலின் நடை ஒவ்வொரு மாதமும் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 16-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. ஐந்து நாள் தொடர் வழிபாட்டுக்குப் பின் 21-ம் தேதி இரவு நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில், 'நிறைபுத்தரிசி' பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படவுள்ளது. இதுகுறித்து சபரிமலை தேவசம் போர்டு தெரிவித்துள்ளதாவது:- "பருவநிலை மாற்றத்தால் ஆலப்புழா மாவட்டத்தில் நெற்பயிர்கள் முன்கூட்டியே அறுவடைக்கு தயாரானதால், சபரிமலையில் வழக்கமாக ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் நடத்தப்பட வேண்டிய 'நிறைபுத்தரிசி பூஜை' நாளை நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் நீலிமலை பாதை வழுக்கும் தன்மை உள்ளதால் சுப்பிரமணிய பாதையில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தரிசனத்துக்கு வருபவர்கள் குடை உள்ளிட்ட மழை பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
today sabarimalai temple gate open