இன்று எப்படிப்பட்ட முக்கியமான நாள் தெரியுமா?..! தெரிந்துகொள்ளுங்கள்..!! 
                                    
                                    
                                   today Indian army celebrate 70 th infantry day 
 
                                 
                               
                                
                                      
                                            காலாட்படை தினம்:
காலாட்படை தினம் அக்டோபர் 27ஆம் தேதி இந்திய ராணுவத்தால் கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பின் 1947ஆம் ஆண்டு இதே நாளில், காலாட்படையினர் காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போர் நடைபெற்றது. 
இந்த போரில் வெற்றி பெற்று காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். காலாட்படையினரின் வீர செயலை போற்றும் வகையில் இந்திய காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது. 

உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம்: 
உலக பாரம்பரிய ஆடியோ விஷுவல் தினம் அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ அமைப்பானது இத்தினத்தை 2005ஆம் ஆண்டு அறிவித்தது. 
ஆடியோ ஆவணங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினம் கடைபிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.
தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், ஆடியோ சங்கங்கள், தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே கூட்டு முயற்சி ஏற்படுத்த இத்தினம் முதன்முதலாக 2007ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       today Indian army celebrate 70 th infantry day