CAA சட்டம் - அசாம் மாநிலத்தில் இன்று முழு அடைப்பு.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆவணமற்ற முஸ்லீம் அல்லாத குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்காக, குடியுரிமை (திருத்தம்) சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இந்த சட்டத்திற்கான விதிகளை நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக அசாமில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

நேற்று மாநிலம் முழுவதும் அசாம் மாணவர் அமைப்புகள் இந்த சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அசாம் மாநிலத்தில் இன்று டார்ச் லைட் பேரணி, சத்தியாகிகரம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப்போவதாக மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளன.

இதைப்போன்று 16 எதிர்க்கட்சிகள் இணைந்த ஐக்கிய எதிர்க்கட்சி மன்றம் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டங்களால் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today bandh in assam for caa against


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->