கொங்கு வாழ் மக்களை பாராட்டிய பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக - பாமக - பாஜக - த.மா.க உட்பட பல கட்சிகள் இணைத்து தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூட்டணிக்கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டணி வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, " கொங்கு வாழ் பகுதி மக்கள் மிகவும் கனிவான மக்கள். உங்களின் உழைப்பும், வியாபார நுணுக்கமும் பாராட்டுதலுக்குரியது. கொரோனா காலத்திலும் மக்களுக்கு பல வகையிலான உதவியை செய்துள்ளீர்கள். கனிவான இரக்க குணத்தையும் உங்களிடம் அதிகம் கொண்டுள்ளீர்கள். அதனை நான் அறிவேன்.

கொங்குப்பகுதியில் உள்ள தொழிலதிபர்கள் எப்போதும் நாட்டிற்கு பெருமை சேர்ப்பவர்கள், செல்வதை சேர்ப்பவர்கள், மரியாதையை சேர்பவர்களாக இருப்பவர்கள். உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்தால் தமிழகத்தில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் பயனடைந்துள்ளது " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Dharapuram Modi Congrats to Kongu Peoples


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->