கருத்துகணிப்பு முடிவு! மோடியா? ஐ.என்.டி.ஐ.ஏ? உ.பி, தமிழ்நாடு மக்களின் தேர்வு யார்?!  - Seithipunal
Seithipunal


வருகின்ற 2024 மக்களவை தேர்தலில் எந்தக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பை, டைம்ஸ் நவ் இந்தியா செய்தி நிறுவனமும், இடிஜி நிறுவனமும் இணைந்து கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த சர்வே தொலைபேசி வாயிலாக 60%, வீடு வீடாக சென்று 40% என, கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி 69 தொகுதிகள் முதல் 73 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.

ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி உத்திரபிரதேச மாநிலத்தில் மூன்று முதல் ஏழு தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும் வெளியான இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றது.

வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை பாஜக தலைமையிலான கூட்டணி 51.20% வாக்குகளையும், ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணி 38% வாக்குகளையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றது.

தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக 20 முதல் 24 தொகுதிகளிலும், அதிமுக நான்கு முதல் எட்டு தொகுதிகளிலும், பாஜக ஒரு இடத்திலும், காங்கிரஸ் கட்சி 9 முதல் 11 இடங்களிலும், பிறக்கட்சிகள் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது.

நாடுமுழுவதும் உள்ள 543 தொகுதிகளில், சுமார் 296 முதல் 326 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும் என்று அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

எதிர்க்கட்சிகளின் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணி 160 முதல் 190 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும், அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Times now survey for 2024 election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->