திருப்பதி ஏழுமலையான் சாமி தரிசனம்.. டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் நவம்பர் 11ம் தேதி வெளியீடு.! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் நவம்பர் 11ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறும் வசதி சமீபத்தில் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் தினமும் 35 ஆயிரம் பக்தர்கள் என ஒரு மாதத்திற்கு 10.5 லட்சம் பக்தர்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. 300 ரூபாய் தரிசன டிக்கெட் மற்றும் ஆர்ஜித சேவை கல்யாண உற்சவம் உள்பட அனைத்து டிக்கெட்டுகளும் நவம்பர் 11ம் தேதி  வெளியிடப்படுகிறது.

மேலும், 300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில்  tirupatibalaji.ap.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும், நவம்பர் 27-ம் தேதி மணி முதல் அதே இணைய தளம் மூலம் திருமலையில் தங்கும் அறைக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupathi temple online ticket booking open From November 11


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->