ஆந்திராவில் மூன்று மாதத்தில் மூன்றாவது முறை வந்தே பாரத் ரெயில் மீது தாக்குதல்.!  - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் மூன்று மாதத்தில் மூன்றாவது முறை வந்தே பாரத் ரெயில் மீது தாக்குதல்.! 

இந்தியாவில் உள்ள சில முக்கிய நகரங்களில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 'வந்தே பாரத்' என்ற பெயரில் அதிநவீன வசதிகள் கொண்ட ரெயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே துறை முடிவுசெய்தது. 

அந்த முடிவின் படி, நாட்டில் சில முக்கிய நகரங்களுக்கு இடையே, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி முதல் வாரணாசி வரை முதல் வந்தே பாரத் ரயில் துவங்கப்பட்டது.

அதன் பின்னர் தற்போது வரைக்கும் 12 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. இது ஒரு புறம் இருப்பினும் இந்த வந்தே பாரத் ரெயில்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தபட்டு வருகிறது.

அந்த வகையில், ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டினம் - செகந்திராபாத் சென்ற வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. 

இந்தத் தாக்குதலால் ரெயில் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. கடந்த மூன்று மாதங்களில் இந்த வழித்தடத்தில் நடந்த மூன்றாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

third time attack on vande barath train in andira


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->