மத்திய அரசு முதல் நாடுளுமன்ற கூட்ட தொடரில் நிறைவேற்ற போகும் மசோதா.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு முதல் நாடுளுமன்ற கூட்ட தொடரில் முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பிற்காக இந்த சட்டம் இயற்றப்படுகிறது  

 

இது தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பெண்களின் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்தது. குறுகிய காலத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்றும் அது ஏற்க முடியாது என்றும் அந்த மசோதாவில்  கூறபடுகிறது. ஒரு முஸ்லீம் ஆண்கள் முத்தலாக் முறையை பயன்படுத்தி  3 முறை விவாகரத்து செய்து வேறு திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதை தடுக்கவே இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

 

இந்த மசோதாவை நிறைவேற்ற எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது இதனால் மாநிலங்கவையில் நிறைவேற்றப்படவில்லை. இதை அடுத்து முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பிற்கு அவசர சட்டமாக இரண்டு முறை ஆணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது 16-வது மக்களவையின் பதவிக் காலம் முடிவுற்ற நிலையில், முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் முஸ்லிம் பெண்கள் மசோதாவும் காலாவதியாகிவிட்டது.

 

மத்தியில் மீண்டும் பா.ஜ.க.கூட்டணி அமோக வெற்றிபெற்ற நிலையில் ஆட்சி பொறுப்பை தக்க வைத்தது. இதில் வரும் 17-ம் தேதி முதல் நாடுளுமன்ற கூட்ட தொடரில் நிறைவேற்றப்படுவதாக உறுதியளித்துள்ளது.வரும் 19-ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில். தற்போது மக்களவையின் தற்காலிக தலைவராக மேனகா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். 542  நாடுளுமன்ற உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.  

 

வரும் 20 ம் தேதி மாநிலங்களவை கூடுகிறது. இதில் 542 உறுப்பினர்களுக்கும் பதவி ஏற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்புரையாற்ற உள்ளார்.அவசர சட்டம் காலாவதி ஆனதால் இந்த சட்டம் முதல் கூட்டத்தொடரிலேயே முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Muthalak legislation in the first session of the Parliamentary Assembly of the central Government


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->