மருத்துவ கல்வியின் தரம் இப்படியா..? நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண்: MD, MS உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்த 14 பேர்: பட்டியல் வெளியாகியுள்ளது..!
The list of 14 candidates who scored zero in the NEET exam who have been admitted to postgraduate medical courses including MD and MS has been released
நீட் தேர்வில் ஜிரோ மதிப்பெண் எடுத்தும் m.d., m.s., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்த 14 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்த 27 பேர் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்க்கபட்டுள்ளதால் 800-க்கு ஜீரோ மதிப்பெண் பெற்று தரவரிசையில், 02 லட்சத்துக்கும் கீழ் இடம் பெற்றவர்களுக்கும் எம்.டி. படிப்பில் சேர்ந்துள்ளனர்.
அதாவது, நீட் தேர்வில் அனைத்து கேள்விகளுக்கும் தவறான பதில் அளித்தவர்களுக்கும் எம்.பி. படிப்பில் இடம் கிடைத்துள்ளது. நீட் தேர்வில் ஜீரோவுக்கும் கீழ் மைனஸ் 40, மைனஸ் 25 உள்ளிட்ட மதிப்பெண் பெற்ற 13 பேருக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.பொதுவாக போட்டித் தேர்வுகளில் ஜீரோ மதிப்பெண் பெற்றால் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். ஆனால், முதுநிலை நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் பெற்றவர்கள் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு தகுதி வரம்பை உருவாக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, 50 % பர்சன்டைல் கட்- ஆப் மதிப்பெண் பெற்றால் மட்டுமே நீட் முதுநிலை சேர்க்கையில் சேர முடியும் என வரம்பு உள்ளது.
இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வில் காலியிடங்கள் அதிகரித்ததால் 2023-இல் ஜீரோ பர்சன்டைல் முறையை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையால் நீட் தேர்வில் ஜீரோ, அதற்கு கீழ் மதிப்பெண் எடுப்பவர்களும் எம். டி. படிப்பில் சேரும் நிலை உருவாகியுள்ளது.
ஜீரோ மதிப்பெண் எடுத்தவர்களும் எம். டி. படிப்பில் சேர்க்கப்படுவதால் நீட் தேர்வின் நோக்கமே வீணடிக்கப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண்ணுடன் ரேங்க் எடுத்த மாணவர்களையும், ஜீரோ மதிப்பெண் எடுத்துவர்களையும் ஒரே வகுப்பில் சேர்ப்பது நியாயமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜீரோ மதிப்பெண் பெற்றவர்களும் முதுநிலை படிப்பில் சேரும் நிலை என்பது மருத்துவக் கல்வி தரம் மீதான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The list of 14 candidates who scored zero in the NEET exam who have been admitted to postgraduate medical courses including MD and MS has been released