உ.பி. ஜான்சி நகரின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் சுட்டுக்கொலை; திருமண நாளிலேயே பழிதீர்த்த ரகசிய கணவன்..! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரான அனிதா சௌத்ரி  கடந்த ஜனவரி 04-ஆம் தேதி, காதலனால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான அவரது காதலன் முகேஷ் ஜா என்பவரைப் போலீசார் என்கவுண்டரில் காலில் சுட்டுக் கைது செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 06 ஆண்டுகளுக்கு முன்பு முகேஷ் ஜாவும் அனிதாவும் ஒரு கோயிலில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், சில காலத்திலேயே அனிதா அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும்,  அனிதா தன்னை விட்டுச் சென்றதைத் துரோகமாகக் கருதிய முகேஷ், அனிதாவைப் பழிவாங்கத் திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, தங்களது திருமண நாளான, ஜனவரி 04-ஆம் தேதியன்று அனிதாவைக் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அன்று இரவு ஆட்டோ ஓட்டிச் சென்ற அனிதாவை வழிமறித்த முகேஷ், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

இதனையடுத்து, தலைமறைவான முகேஷை, நேற்று இரவு போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். அவர் போலீசாரைச் சுட முயன்ற போது, தற்காப்பிற்காகப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முகேஷின் காலில் குண்டு பாய்ந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The husband shot and killed the first female auto driver of Jhansi city in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->