80,90 களில் பிறந்தவர்களை விட அறிவாற்றல், பழக்க வழக்கங்களில் பின்தங்கியுள்ள GEN Z தலைமுறையினர்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்...! - Seithipunal
Seithipunal


80, 90களில் பிறந்த மில்லனியர்களை விட 1997-2012 காலகட்டத்தில் பிறந்த ஜென் Z தலைமுறையினரின் அறிவாற்றல் மற்றும் IQ குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளன. 

பிரபல நரம்பியல் விஞ்ஞானி ஜாரெட் ஹோர்வத் நடத்திய முக்கிய ஆய்வில், முந்தைய தலைமுறையை விட புதிய தலைமுறையின் IQ அதிகமாக இருக்கும் என்ற பிளைன் விளைவு கோட்பாடு தலைகீழாக மாறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 100 ஆண்டுகளாக ஒவ்வொரு தலைமுறையிலும் IQ அளவு அதிகரித்து வந்த நிலையில், இப்போது முதன்முறையாக இந்த வளர்ச்சி நின்று, IQ அளவுகள் குறையத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் வாசிப்பதை ஜென் Z தலைமுறையினர் பெருமளவு தவிர்த்துவிட்டு, அதிக நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஜென் Z தலைமுறையினர் நீண்ட கட்டுரைகளையோ அல்லது புத்தகங்களையோ வாசிக்காமல் இருப்பதோடு, சுருக்கமான தகவல்களையும் வீடியோக்களையும் பார்ப்பது ஆழமாகச் சிந்திக்கும் திறனை பாதிக்கிறதாகவும், இதனால் ஒரு விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாமல் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களின் அதிகப்படியான சமூக ஊடக பயன்பாடு, கவனச்சிதறலை அதிகரித்து, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் திறன் ஆகியவற்றை மழுங்கடிக்கிறதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்திருந்தாலும், அது அறிவாற்றல் வளர்ச்சிக்கு உதவாமல் இல்லாமலும், அனைத்தையும் மேலோட்டமாகப் பார்க்கும் தன்மையை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜென் Z தலைமுறையின் அறிவுத்திறன் பாதிப்பிற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

அறிவுத்திறன் மட்டுமின்றி ஜென் Z தலைமுறையினர் பழக்க வழக்கங்களிலும் மில்லனியர்களை விட மாறுபட்டுள்ளதாகவும், முந்தைய தலைமுறையில் 72 சதவீதமாக இருந்த மதுப்பழக்கத்தின் மீதான ஆர்வம் ஜென் Z இடையே 62 சதவீதமாக குறைந்துள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Gen Z generation lags behind those born in the 80s and 90s in cognitive abilities and habits


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->