நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா..!
The Constituency Delimitation Bill and the Womens Reservation Bill Defeated in Parliamentary Vote
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாக்கள் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விவாதிக்கப்பட்டது. இதன்போது இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பேசிய நிலையில், மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலுரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று வாக்கு செலுத்தினர். இதில், 489 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
அதில், 278 உறுப்பினர்கள் ஆம் என்று மசோதாவுக்கு ஆதரவும், 211 உறுப்பினர்கள் இல்லை என்று எதிராகவும் வாக்களித்தனர். இதன் காரணமாக, தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறாததால், இந்த மசோதா சபையில் தோல்வியடைந்துள்ளது.
அதாவது, மக்களவையில் 03-இல் 02 பங்கு பெரும்பான்மை தேவையாக இருக்கிறது. அந்தவகையில் 326 ஆதரவு வாக்குகள் தேவையாக இருந்தது. ஆனால், இன்றைய வாக்கெடுப்பில், 489 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்திய நிலையில், அதில், 278 உறுப்பினர்கள் ஆம் என்று மசோதாவுக்கு ஆதரவும், 211 உறுப்பினர்கள் இல்லை என்று எதிராகவும் வாக்களித்தனர். அத்துடன், இந்த தொகுதி மறுவரையறையோடு இணைத்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் கொண்டுவரப்பட்டதால் அதுவும் தோல்வி அடைந்துள்ளது.
English Summary
The Constituency Delimitation Bill and the Womens Reservation Bill Defeated in Parliamentary Vote