குரங்கை தூக்கிலிட்டு கொடூர கொலை செய்த இளைஞர்கள்.. நெஞ்சை உலுக்கிய பகீர் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


குரங்கு ஒன்றை தூக்கிட்டு கொலை செய்யும் கொடூர வீடியோ காட்சிகளானது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தின் அம்பலா கிராமத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் என்பது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள், குரங்கு ஒன்றை தூக்கில் ஏற்றி கொலை செய்யப்படுவது அரங்கேறியுள்ளது. 

மேலும், இளைஞர்கள் குரங்கை தூக்கில் போட்ட நிலையில், கீழே இருந்த நாயும் குரங்கை துன்புறுத்தும் பதிவுகளும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியான நிலையில், இந்த விஷயம் தொடர்பான தகவலை வனத்துறையினர் பெற்றுள்ளனர். 

இதன்பின்னர் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொள்ளையில் அம்பலா கிராமத்தை சார்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஒரு குரங்கை பிடித்து தூக்கில் போட்டால், பிற குரங்குகள் பயத்தில் இப்பகுதிக்கு வராது என்று கூறியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana Monkey Killed by youngsters like suicide police arrest culprits


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal