சுட்டெரிக்கும் வெயில்... பீர் தட்டுப்பாடு காரணமாக குடிமகன்கள் அவதி! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா, ஹைதராபாத் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் மது பிரியர்கள் அதிக அளவில் பீர் குடிக்க தொடங்கிவிட்ட நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள மது கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

கிராம பகுதிகளில் உள்ள மது கடைகளில் முழுமையாக பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் குடிமகன்கள் அவதி அடைகின்றனர். 

இதுகுறித்து மதுக்கடை ஊழியர்கள் தெரிவித்திருப்பதாவது, தெலுங்கானா மாநிலத்தில் மது உற்பத்தி நிறுவனங்கள், மது ஆலைகளுக்கு ரூ. 1000 கோடி நிலுவைத் தொகை நிலுவையில் உள்ளது. 

ஆனால் கலால் துறை 100 கோடி மட்டும்தான் செலுத்தியுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாகவே பீர் உற்பத்தி செய்ய முடியாமல் மது கடைகளுக்கு பீர் சப்ளை படிப்படியாக குறைந்துவிட்டது. 

இதற்கிடையே வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநிலத்தில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்காக கலால் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana beer shortage


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->