பள்ளி மாணவர்களுக்கு மது விருந்து அளித்த ஆசிரியர்..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?
Teacher throws wine party for school students Do you know what happened in the end?
மாணவர்களுக்கும் பள்ளி விடுமுறை தினத்தன்று மாணவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு மதுபானத்தை ஊற்றி கொடுத்து குடிக்க வைத்து மது போதையின் ருசியை தொடர்ந்து காட்டியுள்ளார் ஆசிரியர் ஒருவர்.
சமீபகாலமாக பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு அளிப்பது அதிகரித்து வருகிறது.அப்படி பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.இது ஒருபுறம் இருக்க ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு மது விருந்து அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் கத்னி அருகே கிர்கானி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் லால் நவீன் பிரதாப் சிங் என்பவர்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த ஆசிரியர் பள்ளி வகுப்புக்கு பாடம் எடுக்க வரும்போதெல்லாம் மதுபோதையிலேயே தொடர்ந்து வந்துள்ளார் என்பதும் அவர் மீது குற்றசாட்டு உள்ளது.
மேலும் தன்னுடைய மாணவர்களுக்கும் பள்ளி விடுமுறை தினத்தன்று மாணவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு மதுபானத்தை ஊற்றி கொடுத்து குடிக்க வைத்து மது போதையின் ருசியை தொடர்ந்து காட்டியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் வீடியோ வைரலான நிலையில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் லால் நவீனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
English Summary
Teacher throws wine party for school students Do you know what happened in the end?