தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர்! முதல்வர் ஸ்டாலினின் அழைப்பு ஏற்பு! - Seithipunal
Seithipunal



பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசு தலைவர் தமிழகம் வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை புதுதில்லி புறப்பட்டுச் சென்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை சந்தித்து நேரில் அழைப்பு விடுத்தார்.

முதல்வரின் அழைப்பை ஏற்று, ஜூன் 5 ஆம் தேதி குடியரசு தலைவர் தமிழகம் வர உள்ளார் என்ற அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தமிழகம் வரும் குடியரசு தலைவர், சென்னையில் 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.

இந்த திறப்பு விழாவிற்கு தமிழக அரசு தரப்பில் சிறப்பாக செய்ய ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இதற்கிடையே டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை இரவு 8.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu CM MK Stalin calls on President Droupadi Murmu in Delhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->