விபத்தில் சிக்கிய ரிஷப்பண்ட் குணமடைய வேண்டி ஒடிசாவில் மணற் சிற்பம்.!   - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ரிஷப்பண்ட், நேற்று டெல்லியில் இருந்து சொகுசு காரில் தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது, டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரிஷப்பண்ட்க்கு தலை, முதுகு, கால் போன்றவற்றில் படுகாயம் ஏற்பட்டது. 

இதனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பார்த்து உடனே ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமணையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டி, ஒடிசாவின் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். 

அந்த சிற்பத்தில், கிரிக்கெட் மட்டையில் ரிஷப் பண்ட் உருவம் மற்றும் 'விரைவில் குணமடையுங்கள் ரிஷப் பண்ட்' அதாவது, Get Well soon Rishabh pant என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sutharshan patnayak make sand art for rishabh pant


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->